29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இந்தியா

கேரளாவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் உயிரிழப்பு: ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒருவருக்கு சிகிச்சை

கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த குருவாயூர் பகுதியை சேர்ந்த அந்த 22 வயது இளைஞர் கடந்த 27ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குரங்கு அம்மை நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கேரள அரசு தெரிவித்தது. அவரிடமிருந்து எடுத்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன

உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்புஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980 களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் உடன் இணைந்த பண்புகளைக் கொண்ட தாகும்.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப் பட்டிருந்தது. கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்துஇந்தியாவுக்குத் திரும்பியவர்கள்தான்.

ஆனால் டெல்லியில் குரங்குஅம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருப்பவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாதவர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் ஒருவருக்கு சந்தேகத்துக்கு இடமான குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

கர்நாடகா: எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 55 வயதான நோயாளி சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை முதல் வாரத்தில் கர்நாடக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஆனால், அண்மையில் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் அவரிடம் தென் பட்டதால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரோடு தொடர் பில் இருந்தவர்களையும் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஆந்திரா: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுசிறுவனுக்கு குரங்கு அம்மைநோய்த் தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்துஅவர் குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை ஆப்பிரிக்காவுக்கு வெளியே பிற எந்தவொரு நாட்டிலும் உயிரிழப்பு இல்லை என்ற நிலை இருந்தது. இந்நிலை யில் தொற்றுக்கு பிரேசில் நாட்டில் 41 வயதான நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil

Leave a Comment