வவுனியாவில் இளைஞர் சுட்டும், வெட்டியும் படுகொலை!

Date:

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒரு கட்டு துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கட்டுத்துவக்கினால் அவர் மீது சுடப்பட்டுள்ளதாகவும் அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளம் குடும்பஸ்தரது உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்படுவதுடன், ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என அழைக்கப்பட்ட யோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்