கொழும்பு, விவேகானந்தா மேடை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) இரவு இந்த சம்பவம் நடந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் ஆண்டனி பேர்னார்ட் (51) என்பவரே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 9MM ரக கைத்துப்பாக்கியால் சுட்டதில், சுந்தரத்தின் தலை, நெஞ்சுப் பகுதிகளில் காயமேற்பட்டு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1