ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படாமலிருந்தால், நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே நாட்டின் கடைசி நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தானும் தனது குழுவினரும் சர்வகட்சி அரசாங்கத்துக்காக குரல் எழுப்பியதாகத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால் எதிரணியில் அமரவும் தமது அணி தயங்கப்போவதில்லை என்றும் அழஹப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1