Pagetamil
இலங்கை

5 கண்ணீர்ப்புகை குண்டுகளை எடுத்துக் கொண்டு ஓடியவர் கைது!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக கருதப்படும் ஐந்து கண்ணீர் புகை குண்டுகளுடன் ஏத்துல் கோட்டே பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான இவர் ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை முச்சக்கரவண்டியில் கொண்டு வந்திருந்ததாகவும் அதிகாரிகளின் கூற்றுப்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் சில புகை குண்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண-தெற்கு துணைத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment