பாகிஸ்தானிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3வது நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று, 323 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்களை பெற்றது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 231 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
சல்மான் 62 ஓட்டங்களை பெற்றார்.
ரமேஷ் மெண்டிஸ் 47 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜெயசூர்யா 80 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இலங்கை இரண்டாவது இன்னிங்சில், ஆரம்ப விக்கெட்டுக்களை விரைவில் இழந்தது.
நிரோஷன் டிக்வெல்ல 15, ஓஷத பெர்னாண்டோ 15, குசல் மென்டிஸ் 15, அஞ்சலோ மத்யூஸ் 35, சந்திமல் 21 ஓட்டங்களை பெற்றனர்.
முதல் இன்னிங்சில் உபாதையடைந்த திமுத் கருணாரத்ன 6ஆம் இலக்கத்தில் களமிறங்கினார்.
தனஞ்சய டி சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுள்ளனர். கருணாரத்ன 27 ஓட்டங்களுடனும், தனஞ்சய 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
கருணாரத்ன முதுகில் அடிபட்ட காயத்துடன் சிரமப்பட்டு ஆடினார். விக்கெட்டுக்களிற்கிடையில் ஓடுவதற்கு சிரமப்பட்டார்.
இலங்கை 323 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.