26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
கிழக்கு

இரவில் கிணற்றில் குதித்தவர், காலையில் கோயில் மரத்தில் உயிரை விட்டார்!

மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு பிரதேசத்தில் காளி கோயில் ஆலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக நேற்று (25) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

மகிழடித்தீவு பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குமாரசாமி திலகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு வீட்டின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அங்கிருந்து காப்பாற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த நபரின் மனைவியார் இன்று அதிகாலை ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல எழுந்து கணவரை தேடிய போது அவரை வீட்டில் காணவில்லை. எனவே அவர் அருகில் சென்றிருக்கலாம் என நினைத்து அவர் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள காளி கோயில் மூலஸ்தானப் பகுதியிலுள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பாறையில் கரை ஒதுங்கிய உயிரிழந்த கடலாமைகள்

east tamil

அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையில் நினைவு தினமும் நல உதவியும்

east tamil

திருவள்ளுவர் சிலைக்கும் தடை: கல்முனையில் நிலைமை!

Pagetamil

சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

east tamil

எரிபொருள் பவுசர் – முச்சக்கரவண்டி விபத்து

east tamil

Leave a Comment