குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்வாநெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மருந்துகள் பிரிவான பவேரியன் நார்டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இம்வாநெக்ஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திற்கும் ஐஸ்லாந்து, லீசஸ்டைன் மற்றும் நார்வே நாடுகளிலும் செலுத்தத்தக்கது.
இதுவரை உலகம் முழுவதும் குரங்கு அம்மை 72 நாடுகளில் பரவியுள்ளது. 16,200 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்வாநெக்ஸ் தடுப்பூசி ஏற்கெனவே பெரியம்மைக்கு எதிராக பயன்பட்டது. அதை தடுப்பூசியை தற்போது குரங்கு அமைக்கு எதிராக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காரணம், குரங்கு அம்மை வைரஸுக்கும், பெரியம்மை வைரஸுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.இருப்பினும், ஐரோப்பிய யூனியன் சட்டத்தின்படி ஐரோப்பிய மருத்துவ முகமை என்பது இந்தத் தடுப்பூசியை பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஐரோப்பிய ஆணையம் மட்டுமே அதை செய்ய முடியும்.
குரங்கு அம்மை அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அற்குறிகள். முதல் ஐந்து நாட்களுக்கு இது இருக்கும். பின்னர் முகத்தில் தடிப்புகள், உள்ளங்கை, உள்ளங்காலில் தடிப்புகள், வெடிப்புகள் உண்டாகும்.
கடந்த 1970ஆம் ஆண்டில் ஆபிரிக்காவின் கொங்கோ நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மை கண்டறியப்பட்டது.
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் நீண்ட காலமாகவே அவ்வப்போது குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் அண்மைக்காலமாக இந்த பாதிப்பு உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.