Pagetamil
இலங்கை

20-25 பேர் கொண்ட அமைச்சரவை விரைவில் பதவியேற்கும்!

இன்று பதவியேற்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்க ரணில் தரப்பு முயற்சிக்கிறது. நேற்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் இதனை வெளிப்படுத்தினார்.

பல இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியில் இருந்து எந்தத் தலைவரும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்றால், இரகசிய வாக்கெடுப்பில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு அது வழங்கப்படும்.

அரசியலமைப்பின் படி, அமைச்சரவையின் அளவு 30 ஐ தாண்டக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

Pagetamil

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

Pagetamil

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் – மீனவர்கள் எதிர்ப்பு

east tamil

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான முக்கிய சந்திப்பு

east tamil

Leave a Comment