இலங்கை முழுவதும் அவசரகால சட்டத்தை அமுல்ப்படுத்தியுள்ளார் பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) இரண்டாம் பாகத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டின் சட்டம் எண். 8, 1978 ஆம் ஆண்டின் சட்டம் எண். 6 மற்றும் 1988 ஆம் ஆண்டின் சட்டம் எண். 28 ஆகியவற்றால் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு ஆணையின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.




