29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

யாழில் வீடு புகுந்து பெற்றோல் திருட்டு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர்.

குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

காலையில் வீட்டார் எழுந்து மோட்டார் சைக்கிளை இயக்கிய போது மோட்டார் சைக்கிளில் இயங்காத நிலையிலையே பெட்ரோல் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடிக்கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது வீட்டினுள் புகுந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் வீடியோ காட்சியினை சமூக வலைத்தளங்களில் வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!