வீடிழந்த பெரமுன அரசியல்வாதிகளிற்கு ரணில் வீடு கொடுக்கிறார்!

Date:

பொதுமக்ககளின் தாக்குதல்களினால் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை இழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளார்.

அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் பதில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொத்துக்களை அழித்தவர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், தமது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமளிக்கப்படாது எனவும் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பதில் ஜனாதிபதி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி பொதுஜன பெரமுன குண்டர்கள் அரங்கேற்றிய வன்முறைக்கு பதிலடியாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் திரண்டு, அமைச்சர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என ஏறக்குறைய எண்பது பேரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்