அமெரிக்க ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியனைப் போல தன் முகத்தை மாற்ற நினைத்து 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட பிரேசில் மொடல் அழகி நிம்மதியையும், பணத்தையும் இழந்துள்ளார்.
பிரேசிலை சேர்ந்த மொடல் அழகியான ஜெனிஃபர் பேம்பிலோனா என்பவரே இந்த விபரீத ஆசையினால் வில்லங்கத்தில் சிக்கியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைகளிற்காக கிட்டத்தட்ட 600 ஆயிரம் டொலர் செலவழித்த மொடல் ஜெனிஃபர் பாம்ப்லோனா, இப்போது மீண்டும் தனது நிஜமான தோற்றத்தைப் பெற 120 ஆயிரம் டொலர் செலவிட்டுள்ளார்.
29 வயதான பிரேசிலிய மாடல், கடந்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 அறுவை சிகிச்சைகளை செய்து கர்தாஷியனின் தோற்றத்திற்கு ஒத்ததாக மாறியுள்ளார். இருப்பினும்,தனது சொந்த தோற்றத்திலேயே உண்மையான மகிழ்ச்சியுள்ளதை அவர் இறுதியில் உணர்ந்தார்.
“மக்கள் என்னை கர்தாஷியன் என்று அழைப்பார்கள், அது எரிச்சலூட்டத் தொடங்கியது” என்று ஜெனிபர் கூறினார்.
“நான் வேலை செய்து படித்தேன், ஒரு தொழிலதிபராக இருந்தேன். நான் இதையெல்லாம் செய்தேன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த சாதனைகள் அனைத்தையும் செய்தேன், ஆனால் நான் ஒரு கர்தாஷியனைப் போல இருந்ததால் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட்டேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
ஜெனிஃபர் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு வயது 17. விரைவில், அவர் அறுவை சிகிச்சைகளிற்கு அடிமையாகிவிட்டார்.
“நான் அறுவை சிகிச்சைக்கு அடிமையாக இருந்தேன், நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கண்டுபிடித்தேன், நான் சூப்பர் மார்க்கெட்டில் இருந்ததைப் போல என் முகத்தில் ஃபில்லரை வைத்தேன்” என்று இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஜெனிஃபர் கூறினார்.
“இது ஒரு போதை மற்றும் நான் அறுவை சிகிச்சை சுழற்சியில் புகழுக்கும் பணத்திற்கும் சமமானதாக இருந்தேன், நான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திவிட்டேன். நான் மிகவும் கடினமான நேரங்களைச் சந்தித்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
கர்தாஷியனைப் போல தோற்றமளிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே சர்வதேச கவனத்தைப் பெற்றார் ஜெனிபர்.
தனக்கு பாடி டிஸ்மார்பியா உள்ளதை அறிந்து பல நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தன்னுடைய பழைய முகத்தோற்றத்திற்கு மாற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இறுதியில் இஸ்தான்புலில் உள்ள ஒரு மருத்துவரை அவர் கண்டடைந்தார். அந்த மருத்துவர் தன்னால் ஜெனிபரின் பழைய நிலைக்கு அவரை கொண்டு செல்ல முடியும் என்றும் உறுதி அளித்திருந்தார். இதற்காக ஜெனிபர் பலகட்ட அறுவை சிகிச்சைகளை மீண்டும் செய்ய வேண்டி இருந்தது.
அது எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்வதற்கு அவர் முடிவும் செய்தார். சிகிச்சைக்கு முன்பாகவே அவர் எப்படி முகத்தோற்றம் உள்ளவராக மாறப் போகிறார் என்பதையும் கணினி மூலம் காண்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அறுவை சிகிச்சை அறைக்குள் செல்வதற்கு முன் தான் வேறு நபராக இருந்ததாகவும் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது ஏதோ புது பிறப்பு எடுத்தது போல புதிய நபராக வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.