26.6 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

காய்ச்சலால் இளம் வைத்தியர் உயிரிழப்பு: வாய் மூலம் பெற்றோல் உறிஞ்சியெடுத்ததுதான் காரணமா?

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை, ஹாலிஎல்ல பகுதியைச் சேர்ந்த சிந்தக தீபால் அமரசூரிய (31) என்ற வைத்தியரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வைத்தியரின் பிரேத பரிசோதனையில் நிமோனியா தொற்றினால் அவரது நுரையீரலில் பக்டீரியா தொற்று ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதாக, அவரது மனைவி சஜிவ தருஷி ஹேரத் (31) மரணவிசாரணையில் சாட்சியம் அளித்தார்.

அவரது மனைவியின் சாட்சியத்தில்,

நான் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளராக பணிபுரிகிறேன். நாங்கள் நகரத்தில் வசித்து வந்தோம். கணவர் பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பணிபுரிந்தார். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை உள்ளது.

எங்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் மருத்துவத் தொழிலுக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு வயதில் மகன் இருக்கிறான். கணவருக்கு எந்த நோயும் இல்லை.

கடந்த பெப்ரவரி மாதம் எனது கணவர் கோவிட் நோயில் இருந்து குணமடைந்தார். ஜூன் 25ஆம் திகதி என் மகனுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் எங்கள் இருவருக்கும் காய்ச்சல் வந்தது. என் அண்ணனுக்கும் அக்காவுக்கும் காய்ச்சல் வந்து நலம் பெற்றனர். காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தது கணவர்தான்.

கணவருக்கு கடுமையான காய்ச்சல் இல்லை. அதன் பிறகு வேலைக்குச் சென்றார். கணவருக்கு காய்ச்சல் வந்தபோது, அவர் எரிபொருள் வரியில் சென்று இரண்டு நாட்கள் நின்றார். பின்னர் விடுமுறை வந்தது. மீண்டும் இரண்டு நாட்கள் எரிபொருள் வரிசையில் நின்றார்.

ஜூலை 03, 04 ஆகிய திகதிகளில் கணவர் தொடர்ந்து பணியாற்றினார். அப்போது கணவருக்கு இருமல் வந்தது. இருமலுக்கு சிகிச்சை அளித்தும் குறைவில்லை. கடந்த 5ஆம் திகதி கணவர் பேராதனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை தங்க வைத்து சிகிச்சையளித்தனர்.

அதே நாளில், கணவன் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் எக்மோ இயந்திரத்துடன் இணைக்க கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவரை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றவுள்ளதாக கண்டி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நோயாளியின் நிலை சற்று சிரமமாக இருப்பதாகவும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கணவர் இறந்துவிட்டதாக சாட்சியமளித்தார்.

உயிரிழந்த வைத்தியரின் பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி ஜானகி வருஷஹன்னடி மேற்கொண்டார். முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட பிரேத பரிசோதனை அதிகாரி, உடல் முழுவதும் பரவிய நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிப்படைந்து ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்தார்.

இதேவேளை, உயிரிழந்த வைத்தியர் தனது காரிலிருந்து சிறிய வயர் மூலம் பெற்றோலை உறிஞ்சியெடுத்து மோட்டார் சைக்கிளிற்குள் பெற்றோலை விட்டு பயன்படுத்தியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கக்கூடுமென கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கபிலானி விதானாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கமில்லாத, வேறு நோய்களற்ற இளம் வயதுடைய வைத்தியர் அவர் என்றும், பெற்றோல் உறிஞ்சியதால் நுரையீரலில் இரசாயனங்கள் கலந்து, நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டிருக்கலாமென தெரிவித்தார்.

இதனால், வாகனங்களில் இருந்து பெற்றோல் உறிஞ்சியெடுப்பவர்கள் அதை தவிர்க்குமாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம்

east tamil

வேலணை பிரதேச வைத்தியசாலை சிக்கலுக்கு சுமுக தீர்வு: 24 மணித்தியால சேவை தொடரும்!

Pagetamil

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

Leave a Comment