எதிர்காலத்திலும் தாய் நாட்டிற்கு பங்களிப்பேன்: கோட்டாவின் இராஜினாமா கடிதம்!

Date:

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

2020-2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க அவ்வப்போது நாட்டை முடக்க வேண்டியதன் அவசியத்தின் காரணமாக, பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியால், அரசு அன்னிய செலாவணி பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மைக்கு தீர்வு காணும் வகையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து அனைத்து கட்சி அல்லது தேசிய அரசாங்கத்தை அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் மற்றும் பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கோரிக்கை
தாம் ஜூலை 14ஆம் திகதி முதல் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாகவும், தான் அதிக ஆற்றலுடன் சேவையாற்றியதைப் போன்று தான் பிறந்த தாய்நாட்டிற்கு எதிர்காலத்தில் தொடர்ந்து பங்களிப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்