ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதுளை நகரில் கவனயீர்ப்பு ஒன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் என பல தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் பதுளை கோட்டாகோ கம கிளையின் முன்பாக இடம்பெற்றது.
-தெமோதரை நிருபர் இரா சுரேஷ்குமார்-




