சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி இரண்டும் ஏற்றுக்கொள்ளும் பிரதமரின் பெயரை பரிந்துரைக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று (13) அறிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டவுடன் அந்த அரசாங்கத்திடம் பொறுப்புக்களை வழங்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 11ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பதவிகளை விட்டுக்கொடுக்கத் தயார் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1