26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
உலகம்

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் சிரியா ஐ.எஸ் தலைவர் பலி!

செவ்வாய்க்கிழமை (12) சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக பென்டகன் கூறியுள்ளது.

வடமேற்கு சிரியாவில் நடந்த தாக்குதலில் மகேர் அல்-அகல் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியது.

பென்டகன் மத்திய கட்டளை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் டேவ் ஈஸ்ட்பர்ன் ஏஎப்பியிடம், வடக்கு சிரியாவில் ஜின்டிரேஸ் அருகே மஹர் அல்-அகல் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இந்த தாக்குதலில் அவரது உயர்மட்ட உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அலெப்போவிற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தன்னார்வ சிரிய குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பிடென் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் : “ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின்  தலைவரை அகற்றிய பெப்ரவரியில் அமெரிக்க நடவடிக்கையைப் போலவே, இது நமது தாயகத்தையும் உலகெங்கிலும் உள்ள நமது நலன்களையும் அச்சுறுத்தும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது. அமெரிக்கா தனது முயற்சிகளில் இடைவிடாது இருக்கும். பயங்கரவாதிகளை நீதிக்கு கொண்டு வரும்” என்றார்.

அமெரிக்க மத்திய கட்டளையின் தகவல்படி, கொல்லப்பட்டவர் ஒட்டுமொத்த இஸ்லாமிய அரசின் முதல் ஐந்து தலைவர்களில் ஒருவராவார்.

“அல்-அகல் குழுவிற்குள் ஒரு மூத்த தலைவராக இருப்பதுடன், ஈராக் மற்றும் சிரியாவிற்கு வெளியே ஐஎஸ் நெட்வொர்க்குகளின் வளர்ச்சியை ஆக்ரோஷமாகப் பின்தொடர்வதற்கு பொறுப்பானவர்” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நட்பு நாடான குர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, குறிவைக்கப்பட்ட இருவரும் வடக்கு சிரியாவில் செயல்படும் ஆயுதக் குழுவான அஹ்ரார் அல்-ஷர்கியாவுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment