விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

Date:

விம்பிள்டன் 2022 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸை தோற்கடித்து,  நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை (10) நடந்த இந்த போட்டியில் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஃபேல் நடாலுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜோகோவிச்சுக்கு இது ஏழாவது விம்பிள்டன் பட்டம். விம்பிள்டன் வரலாற்றில் அதிகமுறை பட்டம் வென்ற வீரர் சாதனையை அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸ் மற்றும் வில்லியம் ரென்ஷாவுடன் ஜோகோவிச் இப்பொழுது பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரோஜர் பெடரர் இதுவரை  8 முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார்.

ஜோகோவிச் முதல் செட்டில் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதும், இறுதியில்  4-6, 6-3, 6-4, 7-6(3) என்ற கணக்கில் கிர்கியோஸை தோற்கடித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்