தினேஷ் சந்திமலின் கன்னி இரட்டைச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 554 ஓட்டங்களை குவித்துள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியாவை விட 190 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
காலியில் நடக்கும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 4வது நாள் இன்றாகும். 554 ஓட்டங்களுடன் இலங்கை ஆட்டமிழந்ததை தொடர்ந்து, அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.
இலங்கை சார்பில் சந்திமல் ஆட்டமிழக்காமல்206, கருணாரத்ன 86, குசல் மென்டிஸ்85, கமிந்து 61, மத்யூஸ் 52 ஓட்டங்களை பெற்றனர்.
ஸ்டார்க் 89 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
சந்திமல் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் இணைப்பாட்டமாக பெற்றனர்.
லயன் 64 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். 1981க்குப் பிறகு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஒருவர் இன்னிங்ஸில் 60 ஓவர்களுக்கு மேல் வீசுவது இது மூன்றாவது முறையாகும்.