பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கல்கிசை, ஜா எல மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பகுதியில் நேற்று மாலை 6 மணிக்குப் பின்னர் மின்வெட்டு திட்டமிடப்படாத போதிலும், சம்பவத்தின் போது மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.