புதிய அரசு அமைந்த பின் பதவிவிலக தயார்!

Date:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் யோசனை முன்வைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கையில் எரிபொருள் பிரச்சினையும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக உலக உணவு அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் கூறுகிறார்.

எனவே தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்த பின்னர் உடனடியாக வேறொரு அரசாங்கத்தை நியமிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளரும் இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் பதவிவிலக தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்