அடுத்த பிரதமர் எம்.ஏ.சுமந்திரனா?: விக்னேஸ்வரனிற்கு கிடைத்த இரகசிய தகவல்!

Date:

அடுத்த பிரதமராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக தனக்கு நம்பிக்கையான மூலங்களில் இருந்து இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளிற்கிடையில் இன்று இணையவழி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ‘எனக்கு சற்று முன்னர் ஒரு முக்கியமான, இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அடுத்த பிரதமராக எம்.எ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார்’ என்றார்.

இந்த கலந்ரையாடலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டிருந்தார். அவர், இது தொடர்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

எனினும், பின்னர் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அது வெறும் வதந்தியாகவே இருக்கும் என்றார்.

அரசுகளில் அங்கம் வகிப்பது தமிழ் அரசு கட்சியின் கொள்கை அல்ல, அரசில் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் அரசு கட்சி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு சரிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.ஒன்று கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை ஆதரித்தது. மற்றையது, நல்லாட்சிக்காலத்தில் அரசை ஆதரித்தது. அப்படியொரு தவறை தமிழ் அரசு கட்சி மீண்டும் செய்யாது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்