கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி மொரட்டுவையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை மறைத்து வைத்திருந்தார்.
46 வயதான சந்தேக நபர் கட்டுகுருந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்



