முழங்காவிலில் மீட்கப்பட்ட வெள்ளை மண்ணெண்ணெய்: எப்படி வந்தது?

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், நாச்சிக்குடா பகுதியில் 3650 லீட்டர் மண்ணெண்ணையுடன் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 18 கொள்கலன்களுடன் 3650 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதான ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்றைய தினமே இந்த மண்ணெண்ணெய் நாச்சிக்குடாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் வெள்ளை நிறமானது எனவு்ம, இலங்கையில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயிலிருந்து வேறுபட்டு காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து பொதிச்சேவைகள் மூலம் மண்ணெண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக கைதானவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்