இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இறந்தவர் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது நபர் அஜய் பார்டேகி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் செவிலியராகப் பணிபுரியும் 23 வயது காதலியும், அஜய்யும் ஞாயிற்றுக்கிழமை சாவோனரில் உள்ள விடுதியில் சந்தித்தனர். மாலை 4 மணியளவில் அவர்கள் விடுதிக்கு வந்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து, அஜய் சரிந்து விழுந்ததைப் பற்றி அந்த பெண் விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்தார்.
அஜய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது அஜய் சுயநினைவை இழந்ததாக காதலி தெரிவித்தார்.
அஜய்யும் அந்த பெண்ணும் பேஸ்புக்கில் சந்தித்து மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர்.
அவர்கள் இருதரப்பு பெற்றோரைச் சந்தித்து, விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். டிரைவராகவும், வெல்டிங் டெக்னீஷியனாகவும் பணியாற்றி வந்த அஜய்க்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அறையில் அல்லது அஜய்யிடம் போதைப்பொருள் ரேப்பர்கள் அல்லது பாக்கெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிசார் கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் நிலையத்தில் விபத்து மரண வழக்கு பதிவு செய்யப்பட்டது. அஜய்யின் இரத்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
உடலுறவின் போது மாரடைப்பு ஏற்படுவது ஒருவர் நினைப்பது போல் அரிதானது அல்ல என்று இருதயநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த் சஞ்செட்டி தெரிவித்தார்.
சிகிச்சையளிக்கப்படாத கரோனரி தமனி நோய் “செக்ஸ் போன்ற கடுமையான நடவடிக்கைகளின் போது ஆபத்தானது கூறினார். ஏனென்றால், இத்தகைய கடினமான செயல்களின் போது, இதயத்திற்கு அதிக அளவு இரத்தமும் ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது. தேவை பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது மரணம் உட்பட மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.




