மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்பத் தகராற்றினால் ஆண் ஒருவர் நேற்று (06) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில், கொல்லப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச் சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செயயப்பட்டுள்ளார்.
சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியிலுள்ள தாயார் வீட்டில் மனைவி தங்கியிருந்துள்ளார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் கணவன் அங்கு சென்று, மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகனும், உறவினர்களும் அந்த நபர் மீது கத்தியால் வெட்டியதையடுத்து, சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் 17 வயதுடைய மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




