யாழில் திருடிய சைக்கிளை உரிமையாளரிடமே விற்க முனைந்து சிக்கிய ‘ஹைரெக்’ திருடன்!

Date:

பொருட்களை விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தை பயன்படுத்தி, திருடிய துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் வைத்து, பொன்னாலை இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி திருட்டு போயிருந்தது.

இது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் பிரபல இணையத்தளம் ஒன்றில் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி விற்பனை செய்யப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

அதனை அவதானித்த துவிச்சக்கர வண்டியின் உரிமையாளர், விளம்பரத்தில் இருந்த தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு, துவிச்சக்கர வண்டியை வாங்கவுள்ளதாக கூறி விலையை பேசி தீர்மானித்து சங்கானை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி துவிச்சக்கர வண்டியை உரிமையாளரிடமே விற்க வந்த நிலையில் மடக்கிப் பிடித்தனர்.

விற்பனைக்கு கொண்டு வந்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வைரவர் ஆலய இசை நிகழ்ச்சிக்கு தாம் வந்திருந்த போது , தம்மிடம் ஒருவர் இந்த சைக்கிளை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தததாகவும் , அதனையே தாம் வாங்கி மீள விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்தியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சைக்கிளை விற்பனை செய்ய வந்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்