கல்முனையில் முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்!

Date:

எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று (7) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஆரம்பித்து மாநகர பகுதியினுடாக ஊர்வலமாக சென்று பின்னர் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களுக்குரிய எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு மகஜர்களை கையளித்துள்ளனர்.

இதன் போது தாம் எரிபொருள் பிரச்சினை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் அத்தியவசிய சேவை என சில துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படுவதாகவும் எமது சேவையும் அத்தியவசிய சேவையின் ஒரு பகுதியாக கருதி எமக்கான எரிபொருளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரக்கை விடுத்தனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்