கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த கர்ப்பிணி தாய் இன்று காலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பிரசவ வலியால் துடித்த தாயை, பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் காசில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுகப்பிரசவம் இடம்பெற்றது.
ஹட்டனைச் சேர்ந்த 26 வயதான மனைவியும், அவரது 25 வயதான கணவரும் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக நேற்று இரவு முதல் வரிசையில் நின்றனர்.
இன்று காலை பிரசவ வலி அதிகரித்ததையடுத்து, அந்தப் பெண்ணை திணைக்களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பெண் குழந்தையும் தாயும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




