எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு!

Date:

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

பயாகல ஐஓசி பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனியார் நிறுவனமொன்றுக்கு (எலிபன்ட் ஹவுஸ்) சொந்தமான நடமாடும் ஐஸ்கிரீம் வேன் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த ஹிலாரி பெர்னாண்டோ என்ற 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்த அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு உயிரிழந்தார்.

இதேவேளை, பம்பலப்பிட்டியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 60 வயதான முதியவர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 60 வயதானவர்.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்