அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
ஏற்கனவே அஞ்சலோ மத்யூஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜெயவிக்ரம தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார் கூறியதால், நேற்று காலை அவருக்கு (ரபிட் ஆன்டிஜென் டெஸ்ட்) பரிசோதிக்கப்பட்டபோது அவருக்கு கோவிட் பொசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெயவிக்ரம உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார், இப்போது ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.