யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59,177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று (2) இரவு கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.
அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம்விட முற்பட்டபோது அவரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்த பணத்தினைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
அவர்கள் இறங்கிய இடத்தில் சிலரும் காத்திருந்து, பேருந்திலிருந்து இறங்கியவர்களுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.




