எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி

Date:

வவுனியா, 4ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்லைன் பதிவு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி மேற்கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, 4ம் கட்டை ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையில் பெற்றோல் விநியோகம் கடந்த இரு தினங்களாக இடம்பெற்றது. இதன்போது நபரொருவர் தனது மோட்டர் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்ப வந்த போது குறித்த நபர் நேற்று முன் தினம் (30) இங்கு எரிபொருள் நிரப்பியதாக தெரிவித்து அங்கு கடமையில் இருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர் திருப்பி அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து, கடமை முடிந்து குறித்த உத்தியோகத்தர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை விட்டு தனது மோட்டர் சைக்கிளில் வெளியேறிய போது அவ் உத்தியோகத்தரை முற்றுகையிட்ட சிலர் அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர். இதன்போது குறித்த உத்தியோகத்தர் அவர்களிடம் இருந்து மோட்டர் சைகிளில் தற்துணிவுடன் தப்பிச் சென்றிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த...

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்