29.6 C
Jaffna
April 19, 2024
இலங்கை

பாடசாலை செல்ல லொறியில் ஏறிய மாணவர்கள்: அதிகமானவர்கள் ஏறியதால் லொறி உடைந்து விழுந்து 13 பேர் காயம்!

எரிபொருள் நெருக்கடி காரணமாக, போக்குவரத்து வசதியின்றி லொறியில் பயணித்த மாணவர்கள், லொறியின் தரைப்பகுதி இடிந்து விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறிய லொறியில் கலென்பிடுன்வெவ தக்ஷிலா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்துள்ளனர்.

கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெக்கிராவவிலிருந்து தச்சிஹல்மில்லாவ செல்லும் வீதியில், எல்லவெவ சந்தியில், பாடசாலை செல்ல மாணவர்கள் காத்திருந்தனர். எரிபொருள் நெருக்கடியால் பேருந்து சேவை இடம்பெறவில்லை.

நல்லெண்ண அடிப்படையில் மாணவர்களை தனது வானத்தில் ஏற்றிக் கொண்டு சாரதி பயணப்பட்டுள்ளார். சுமார் 30 மாணவர்கள் அந்த வாகனத்தில் ஏறியுள்ளனர்.

சிறிய லொறியின் பாரம் அதிகரித்ததால், தரைப்பகுதி இடிந்து இடிந்து விழுந்துள்ளது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பதின்மூன்று மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படை சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவர்களில் ஒரு மாணவனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment