சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்: சுகாதாரத்துறை விநியோகம் நிறுத்தம்!

Date:

சாவகச்சேரி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, சுகாதார பணியாளர்களிற்கு எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள சுகாதாரத்துறையினருக்கு பிரதி வெள்ளிக்கிழமை தோறும், எரிபொருள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ் மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேச சுகாதாரத்துறையினருக்கு சாவகச்சேரி கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டது.

சுகாதாரத்துறையினருக்கு எரிபொருள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கைதடி முதியோர் இல்லத்தின் உத்தியோகத்தர்களும் எரிபொருள் நிரப்ப வந்தனர்.

எனினும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் தலையிட்டு, அவர்களிற்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்க முடியாது, அவர்கள் சுகாதாரத்துறையினர் அல்லவென குறிப்பிட்டார்.

இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. தமது பணியும் அத்தியாவசிய பணியென சுட்டிக்காட்டிய முதியோர் இல்ல பணியாளர்கள், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, கொடிகாமம் பொலிசார் தலைிடடு, அங்கு எரிபொருள் நிரப்ப வந்திருந்த சுகாதாரத்துறையினர், முதியோர் இல்ல பணியாளர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்