24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

வாழ முடியாமல் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற வயோதிப தம்பதி தமிழக கரையில் மயங்கிய நிலையில் மீட்பு!

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்து உள்ளனர்.

இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

இவர்கள் இருவரும் கடற்கரையில் மயக்க நிலையில் காணப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

UPDATE – காட்டிற்குள் உல்லாசமாக சென்ற எட்டு பேர் கைது

east tamil

Leave a Comment