மத்தள விமான நிலைய பாணியில் வடக்கில் மஹிந்த அரசின் அபிவிருத்தி: அனுரகுமார சுட்டிக்காட்டல்

Date:

பரந்தன் பூநகரி வீதியின் நிலைமை தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் கேள்வி எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இது தொடர்பாக கேள்வியெழுப்பினார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கற்றுக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி.

விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது. இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே என்றார்.

spot_imgspot_img

More like this
Related

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்; இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கப் பிரதேசம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்...

மட்டக்களப்பு தெர்ப்பிகலையில் இராணுவ ரக்கவண்டி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழப்பு இராணுவ சாரதி கைது

மட்டக்களப்பு கிரான் தொப்பிக்கலை வீதியில் இராணுவரக்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்...

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்