நண்பனா விரோதியா என்பதை முகர்ந்து பார்த்து விலங்குகள் கண்டுபிடிக்கும். மனிதர்களும் நண்பர்களை அப்படித்தான் தேர்வு செய்வதாகப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரே மாதிரியான உடல் வாசனை கொண்டவர்கள் உடனே நண்பர்களாகிவிடுவதாக இஸ்ரேலில் உள்ள Weizmann அறிவியல் கழகம் நடத்திய ஆய்வு கூறுகிறது.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் அணிந்துகொள்வதற்கு ஒரு வெள்ளை சட்டை கொடுக்கப்பட்டது.
ஆராய்ச்சியின்போது நண்பர்கள் தனித்தனியாக உறங்க வேண்டும், கடுமையான வாசனை கொண்ட உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன் பிறகு அந்தச் சட்டைகள் சோதிக்கப்பட்டன.
உடனே நண்பர்களாகியவர்களிடையே ஒரே மாதிரியான வாசனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாசனையின் தாக்கம் நிஜ வாழ்க்கையைவிட ஆய்வில் மேலோங்கி இருக்க வாய்ப்பு உண்டு என ஆய்வுக்குழு கூறியது.
மேலும் இந்த விதத்தில் மனிதர்களும் மற்ற விலங்குகள் போல்தான் என்பதை ஆய்வு உணர்த்துவதாகக் குழு குறிப்பிட்டது.