25.3 C
Jaffna
January 21, 2025
Pagetamil
விளையாட்டு

கிரிக்கெட்டின் விசித்திரமான ஆட்டமிழப்பு: சச்சின் சொன்ன மாறுபட்ட கருத்து!

நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்தது கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்துள்ளது.

நிக்கோல்ஸ் அவுட்டான வீடியோவை பகிர்ந்துள்ள சச்சின் தெண்டுல்கர், “இதுவே கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் nநான்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என நாங்கள் அறிவிப்போம்” என சொல்லியுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் லீட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்து ஓல் அவுட்டானது. பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி, 2ஆம் நாள் முடிவில்  ஆறு விக்கெட்டுகளை இழந்தது 264 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து துடுப்பெடுத்தாடிய போது அந்த அணியின் வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விசித்திரமான முறையில் அவுட்டாகி இருந்தார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், அந்த வீடியோவை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கல்லி கிரிக்கெட்டில் இது நடந்திருந்தால் நாங்கள் நொன்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என அறிவித்திருப்போம் என தெரிவித்துள்ளார் சச்சின். நிக்கோல்ஸ் 99 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை எடுத்திருந்தார். அசல் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார் அவர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அவரை அவுட் செய்ய முடியாமல் தடுமாறி வந்தனர். அப்போதுதான் அது நடந்தது.

நிக்கோல்ஸ் அவுட்டானது எப்படி?

நியூசிலாந்து விளையாடிய முதல் இன்னிங்ஸின் 56வது ஓவரை இங்கிலாந்து வீரர் லீச் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்ட்ரைட் திசையில் ஆடியிருந்தார் நிக்கோல்ஸ். ஆனால் எதிர்பாராத விதமாக பந்து நொன்-ஸ்ட்ரைக்கர் எண்டில் விளையாடிக் கொண்டிருந்த மிட்செல் மட்டையில் பட்டு நேராக ஃபீல்டரின் கைகளில் தஞ்சம் அடைந்தது. தொடர்ந்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

இருந்தாலும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்கள் உட்பட போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அவர் எப்படி அவுட்டானார் என்பதை முதலில் அறியாமல் குழம்பினர்.

பின்னர் வீடியோ ரீ-பிளேயில் தான் அவர் எப்படி அவுட்டானார் என்பது தெரிந்து.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment