மட்டக்களப்பில் பிணையில் விடுதலையான இளைஞன் சடலமாக மீட்பு!

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி 3 குதா வீதியிலுள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய பதுர்தீன் சுபைக் அகமட் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த இளைஞன் நேற்றிரவு தூக்கத்துக்கு சென்றவர் இன்று காலை தூக்கத்திலிருந்து எழும்பாத நிலையில் இவர் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையடுத்து, உறவினர்கள் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதுமிந்த நயனசிறியின் வழிகாட்டலில், காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் தலைமையில் சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, குறித்த வீட்டுக்கு சென்று சடலத்தை பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டதோடு, உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞர் கடந்த 40 தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலையாகி இருந்தார் எனவும் தெரிய வருகிறது

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்