29.5 C
Jaffna
April 19, 2024
இலங்கை

பொருளாதார நெருக்கடி எதிரொலி: இலங்கையர்களின் மதுபாவனை குறைந்தது; கள்ளச்சாரயம் கொடிகட்டி பறக்கிறது!

இலங்கையில் மதுபானத்தின் தேவை சுமார் 30% குறைந்துள்ளதாக பொது நிதி தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டு மக்களின் வருமானம் குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு, இலங்கை கலால் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் உட்பட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது நிதி அதிகாரிகள் குழுவின் கூட்டத்தின் போது, ​​அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை பற்றி விவாதிக்கும் இணையவழி கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கை கலால் திணைக்களத்தில் மதுபான உற்பத்திக்கான குறைந்த அளவு எத்தனோல், மட்டுப்படுத்தப்பட்ட டீசல் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இலக்கு வருவாயை அடைவதில் பல சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மதுவின் தேவை சுமார் 30% குறைந்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, இந்த திடீர் விலையேற்றத்தினால் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

Leave a Comment