25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது சர்தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஒவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 36, தனஞ்ச டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக டேவின் வோர்னர் 37 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

கிளென் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன மூன்று விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, தனஞ்ச டி சில்வா மற்றும் துமித் வெல்லாலகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் சாமிக்க கருணாரத்தினதெரிவானார்.

இதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

Leave a Comment