மன்னாரில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு: கடலுணவு விலைகள் எகிறல்!

Date:

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மண்ணெண்ணை இன்மையால் மன்னாரில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

மீன்பிடி நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணென்னய் விநியோகிக்கப் படுவதால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அதே நேரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் உட்பட மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் அண்மைய நாட்களாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையால் மீன் சந்தையில் மீன்களின் வருகையும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துள்ளது. மீன் விலை அதிகரித்துள்ளமையினால் மீன்களை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்ச்சியாக குறைந்துள்ள மையினால் மீன் சந்தைகளை குத்தகை ரீதியாக பெற்று நடத்தும் குத்தகை தாரர்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.

எனவே விரைவில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு தருமாறு மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்