25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் எழுந்துள்ள சர்ச்சையால் அதானி குழுமம் அதிருப்தி!

இலங்கை அரசின் எரிசக்தித் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பெரும் சர்ச்சையால் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக அதானி குழுமம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையில் முதலீடு செய்வதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இந்திய-இலங்கை கூட்டுறவின் வளர்ச்சிக்கு இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம் என நம்புவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களால் தாம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகவும், இந்த விடயத்தை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் கருத்து தெரிவித்தபோது சர்ச்சை வெடித்தது.

பெர்டினாண்டோ தனது அறிக்கையை உணர்ச்சிவசப்பட்ட ஒன்று எனக் கூறி வாபஸ் பெற்றாலும், இந்திய அரசியலிலும் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

Leave a Comment