இலங்கைக்கு ஆதரவளிக்க எந்த நாடும் தயாராக இல்லை என அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியதை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியை தாம் நேற்று சந்தித்த போது, டொலர்களை கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை இலங்கை வழங்கியுள்ளதாக நஷீட் தெரிவித்ததாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானுடன் தான் பேசியதாக நஷீட் தன்னிடம் தெரிவித்ததாகவும், நிதி உதவி பெறும் திட்டம் இலங்கைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரிடமும் நஷீத் பேசியதாகவும், அவர் இலங்கை விற்க விரும்பும் பொருட்களின் பட்டியலைக் கோரியதாகவும், நிதி உதவி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், முகமது நஷீத் இன்று ருவிற்றரில் பதிவிட்ட குறிப்பில், செய்தி சரியானது அல்ல என்று கூறினார்.
பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக தான் நம்புவதாகக் கூறிய நஷீட், அதற்கான உதவிகள் கிடைக்கும் என்றும் கூறினார்.
@HarshadeSilvaMP is a long-time friend and we often meet. I always enjoy his company. This press story isn’t accurate though. I believe a number of countries are willing to help Sri Lanka, and that the assistance will come through. @colombogazette @easwaranrutnam
— Mohamed Nasheed (@MohamedNasheed) June 14, 2022