அரச ஊழியர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அரச ஊழியர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், வெளிநாட்டில் பணிபுரிய அல்லது பிற உற்பத்திப் பணிகளுக்கான ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஊதியம் இல்லாத விடுப்பைப் பெறுவதற்கு, தற்போதுள்ள விதிகளைத் திருத்தி புதிய சுற்றறிக்கைகள் வெளியிடப்படும்.
நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இது தொடர்பான பிரேரணை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1