அடுத்த வாரத்தில் மற்றொரு ராஜபக்ஷவும் ‘அவுட்’!

Date:

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில வாரங்களில் அவர் பதவி விலகுவார் என்றும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சவும் கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில வாரங்கள் வரை ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களே அரசாங்கத்தில் கூட்டமாக பதவிவகித்தனர்.  ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் என ராஜபக்ஷ கூட்டமே எங்கும் நிறைந்திருந்தது.

எனினும், முறையாக முகாமைத்துவம் செய்யாமல் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய பின்னர், ராஜபக்ஷக்களை வீடு செல்லுமாறு மககள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதையடுத்து, தன்னைத்தவிர வேறு ராஜபக்ஷக்களை அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லை எனவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி ஏவுதளங்களை விரைவாக சரி செய்யும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலின் போது குறிவைக்கப்பட்ட பெரும்பாலான நிலத்தடி...

கல்முனை முஸ்லிம்களின் அடையாளம்: எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் என்பதை தமிழ்...

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்