இன்றைய வானிலை!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பு முதல் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

யாழ்ப்பாணம் – சீரான வானிலை
மன்னார் – சிறிதளவில் மழைபெய்யும்
திருகோணமலை – சிறிதளவில் மழைபெய்யும்
மட்டக்களப்பு – சீரான வானிலை
கண்டி – அடிக்கடி மழைபெய்யும்
நுவரெலியா – அடிக்கடி மழைபெய்யும்
இரத்தினபுரி – அடிக்கடி மழைபெய்யும்
கொழும்பு – அடிக்கடி மழைபெய்யும்
காலி – அடிக்கடி மழைபெய்யும்
அனுராதபுரம் – சீரான வானிலை

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக கூறுகிறது அமெரிக்கா

வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...

91 காயங்களுடன் சிதைந்த பிஞ்சு உடல்: கேரளாவை உலுக்கிய படுகொலை – தாயின் காதலன் வெறிச்செயல்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை, தாயின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்