27.8 C
Jaffna
October 1, 2022
இந்தியா

துணியால் ஒன்றாக பிணைத்தபடி கடலில் சடலமாக மிதந்த வயோதிபத் தம்பதி!

வயதான தம்பதி உடலில் துணியைக் கட்டிக்கொண்டு, ஒன்றாக கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், பொன்னாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62). ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி (59). இவர்களது மகன் கனீஷ் பிரபாகர். இவர் கடந்த ஒராண்டுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் இறந்ததால் கோவிந்தராஜும், தனலட்சுமியும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி வீட்டில் இருந்து இருவரும் திடீரென்று மாயமாகினர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, ராமேஸ்வரம் கோவிலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வயதான தம்பதி பிணமாக கடலில் மிதந்து கொண்டிருந்தனர். அவர்களது உடல்கள் இடுப்புப்பகுதியில் துணியால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டியின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

முதியவரிடம் இருந்த ஆதார் அட்டையின் அடிப்படையில், பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், பொன்னாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ்- தனலட்சுமி தம்பதியரே தற்கொலை செய்தார்கள் என்பது தெரிய வந்தது.

கடந்த 3ஆம் திகதி கோவிந்தராஜனும், அவரது மனைவி தனலட்சுமியும் ராமேஸ்வரம் வந்து தங்கியிருக்கின்றனர். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, இதுகுறித்து உறவினர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

இருவரும் தங்களது உடல்களை துணியால் கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிய செய்தியில், கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென்றும், அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்துக்களை விற்று விடுமாறும் கூறியிருக்கின்றனர்.

இருவரது உடல்களையும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பெண் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்!

Pagetamil

மறைந்த கருணாநிதியின் பிறந்த தினம் இன்று ; கருணாநிதியின் பொன்மொழிகள்..

divya divya

தாயின் திருமணத்தைக் கொண்டாடிய மகள்: நெட்டிசன்களும் சேர்ந்து கொண்டாட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!